சைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் அறநெறி வகுப்புக்கள் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 08.30 மணி முதல் 09.00 மணி வரையும் நடைபெறுகிறது. மேலும் மிருதங்க வகுப்பு பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரையும் நடைபெறுகிறது ஆர்வமுள்ள சகல மாணவர், மாணவிகளையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம் இவ் வகுப்புக்கள் யாவும் இலவசமாகவே “மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. மேற்படி செயற்பாட்டிற்கு அயலில் உள்ள பாடசாலைகளும் சைவச் சமூகமும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு சைவபரிபாலன சபை வேண்டி நிற்கின்றது.
செயலாளர்
சைவபரிபாலன சபை


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *