ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கோட்பாட்டுக்கமைய மாணவர்களிடையே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் இலங்கை முழுவதும் பரீட்சைகள் நடாத்திப் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வருகின்றோம். 2025 ஆம் ஆண்டு தரம் 2 முதல் 11 வரை சைவநெறியும் தரம் 2 முதல் 5 வரை மாணவர்களுக்கு தமிழ்மொழி வினாத்தாளும் 6 முதல் 8 வரை தமிழ் மொழியுடனான நுண்ணறிவு (20%) வினாப்பகுதியும் இணைந்து தரம் 12 மாணவருக்கு இந்துநாகரிகம், இந்துசமயம் ஆகிய பாடங்களுக்கும் பரீட்சை நடாத்தவுள்ளோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 2025ஆம் ஆண்டுக்குரிய பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் – 20 ஆம் திகதி (20.12.2025) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும்.
இப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப்பெறாத அல்லது புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் பாடசாலைகள் சபையின் வட்சப் இலக்கம் 077 789 5716 அல்லது 021 222 7678 உடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம்.
பரிசில்களின் விபரம் (சமயம்இ தமிழ்)
ஒவ்வொரு பாடத்துக்கும் தரம் 2 முதல் தரம் 12 வரையான மாணவர்களின் பெறுபேறுகளின் திறமையின் அடிப்படையில்
சான்றிதழ்கள்: A, B, C என வழங்கப்படும்.
சன்மானம்:
- முதலாம் இடம் 10000.00
- இரண்டாம் இடம் 7000.00
- மூன்றாம் இடம் 5000.00
- 3000.00 ஆக 100 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக வழங்கப்படும்
பரீட்சை செயலாளர்