சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை. சபையின் நன்நோக்கங்களில் ஒன்றான அறநெறிப் பாடசாலை அகில இலங்கை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 மாணவர்கள் பதிவு செய்து இலவசமாக கற்று வருகிறார்கள் (வௌ;ளிக்கிழமை மாலை 03.00முதல் 05.00மணி வரை). பரதநாட்டிய வகுப்பும் நடைபெற்று வருகிறது (ஞாயிற்றுக்கிழமை காலை 09.30முதல் 11.00மணி வரை). ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவில் பண்ணிசை, மிருதங்கம்இ யோகாசனம் மற்றும ஆங்கிலமொழி கற்கை வகுப்புக்களும் நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறநெறிப் பாடசாலையின் பதிவு இலக்கம்: ர்யுஃ07ஃ56ஃ14ஃ36 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *