
சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.
திரு. ளு. நாகலிங்கம் அவர்கள் அதன் முதல் முகாமையாளராகவும், திரு. ளு. அப்பாப்பிள்ளை அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்மடார்கள். இதுவே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
அதே போன்று நான்கு வருடங்களாக நடைபெற்று நின்று விட்ட “உதய பானு” பத்திரிகை அச்சு யந்திரம் வாங்கப்பபெற்று “சைவப்பிரகாச அச்சியந்திரசாலை” சைவ பரிபாலன சபையாரால் ஸ்தாபிக்கப்பட்டது.
நீராவியடி சைவப்பிரபு திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் நாவலருடைய மாணவர். அவர் நாவலரிடம் பெருமதிப்பு உள்ளவர். அவர் நாவலர் காலத்திலேயே “கந்தபுராணம்” போன்ற நூல்களை மலிவு விலையில் அச்சிட விரும்பினர். அதற்காக அச்சகம் ஒன்றை வாங்கி வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் வடக்கு வீதியில் சைவப்பிரகாச அச்சியந்திரசாலை என்ற பெயரில் நடத்தினர். இங்கு தான் உதயபானு பத்திரிகை அச்சிடப்பட்டன.
1888ம் ஆண்டு ஆறுமுகம்பிள்ளை இப்பூவுலக வாழ்வை நீத்தும் அச்சகம் மூடப்பட்டது. சைவ சமய பரிபாலன சபையின் முக்கிய ஸ்தாபகர்களுள் ஒருவரான பிறக்ரர் காசிப்பிள்ளை அவர்கள் ஆறுமுகம்பிள்ளை குடும்பத்தின் பிறக்ரரும் ஆவர். அவரே 13 நிபந்தனைகளை ஏற்படுத்தி சைவப்பிரகாச அச்சியந்திரசாலையை சைவ சமய பரிபாலன சபையிடம் கையளிக்க உதவினர். அவற்றுள் ஒன்று “சைவப்பிரகாச அச்சியந்திரசாலை என்ற பெயரிலேயே இவ் அச்சகம் இயங்க வேண்டும் என்பதாகும். பின்னர் இவ் அச்சியந்திரசாலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தென் பாகத்தில் காங்கேசன்துறை வீதியை நோக்கியவாறு அமைந்துள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டு 1928ம் ஆண்டு புதிய கட்டடத்திற்குப் போகும் வரை இயங்கி வந்தது.
சைவப்பிரகாச அச்சியந்திரசாலைiயில் விஆராதி வருடம் ஆசணி மாதம் 28ம் திகதி (11.9.1889) புதன் கிழமை கிருஸ்ணபக்கத் துதியையும் உத்தரட்டாதி நாளுங் கூடிய சுபதினத்திலே தமிழில் “இந்துசாதனம்” என்றும் நாமம் இட்டுப், புறத்தே ஆங்கிலமும் அகத்தே தமிழுங் கொண்ட பத்திரிகை பட்சத்திற்கு ஒரு முறை (இரு கிழமைகட்கு ஒரு முறை) புதன்கிழமை, டெமி அளவில் வெளியிட்டது.
1889ம் ஆண்டு விரோதி வருடம் ஆடி மாதம் 7ம் திகதி “சைவ சமய பரிபாலன சபை” என்ற பெயர் சைவ பரிபாலன சபை என மாற்றப்பட்டது. பின்னர் “ர்iனெர ழுசபயn” “இந்துசாதனம்” பத்திரிகைகள் தனித் தனிப் பத்திரிகைகளாக வெளிவந்தன.
1906 ஆடி முதல் இவ் அரு பிரசுரங்களும் அளவில் பெரிதாகி “றோயல்” பிரமாண அளவில் வெளிவந்தன.
1913 ஆடி முதல் “ர்iனெர ழுசபயn” வாரம் இருமுறை திங்கட்கிழமை வியாழக்கிழமைகளிலும் இந்து சாதனம் வியாழக்கிழமை மாத்திரமும் வெளிவந்தன.
1915 “ர்iனெர ழுசபயn” “இந்துசாதனம்” பத்திரிகையும் வாரந்தோறும் இரு முறை திங்கட்கிழமை வியாழக்கிழமைகளில் வெளிவந்தன.
1923 ஆடி முதல் “இந்துசாதனம்” பத்திரிகையும் வாரந்தோறும் இரு முறை திங்கட்கிழமை வியாழக்கிழமைகளில் வெளிவந்தன.
1928 விபவ வருடம் கார்த்திகை 12 (23.11.28) இந்துக் கல்லூரிக்குத் தென்பால் அமைக்கப் பெற்ற புதிய கட்டடத்தில் சைவப்பிரகாச அச்சுயந்திரசாலையினதும், “ர்iனெர ழுசபயn” “இந்துசாதனம்” பத்திரிகைகளினதும் பிரவேசம் இனிது நடைபெற்றன.
1931 சைவ பரிபாலன சபை 1931ம் ஆண்டு 5ம் பிரிவு அத்தியாயம் 345, சைவ பரிபாலன சபை “ழுசனiயெnஉந” 17 மூலம் சட்ட அங்கீகாரம் பெற்ற சபையாக அங்கீகரிக்கப்பட்டது.
1928 சிதம்பரம் அம்பலவாண சுவாமி புண்ணியநாச்சி மட தரும பரிபாலனத்தைச் சைவ பரிபாலன சபையார் பொறுப்பேற்றனர்.
1939 ஐப்பசி “ர்iனெர ழுசபயn” “இந்துசாதனம்” பத்திரிகைகளின் 50 ஆண்டுகள் சேவையை நினைவு கூர்ந்து தனித்தனியே மலர்கள் அச்சிடப் பெற்று “பொன் விழா” கொண்டாடப்பட்டது.
1946 கல்லூரி வீதியில் 10 பரப்பு காணி சைவ பரிபாலன சபையாரால் வாங்கப்பட்டது.
1947 இக் காணியில் சமயப் பணிகள் புரிவதற்கு நாவலர் ஆச்சிரம மண்டபம் நிறுவப்பட்டது.
1949 “ர்iனெர ழுசபயn” “இந்துசாதனம்” பத்திரிகைகளின் 60 ஆண்டுகள் சேவையை முன்னிட்டு தனித்தனியே மலர்கள் வெளியிடப்பட்டன.
“ர்iனெர ழுசபயn” பத்திரிகைக்குப் பின்வருவோர் கௌரவ பத்திராதிபர்களாகக் கடமை ஆற்றினார்கள்.
திரு. த. செல்லப்பாபிள்ளை 1889-1891
திரு. யு. கதிரவேலு 1891
திரு. யு. சபாபதி 1891-1924
திரு. ஆ .ளு. இளையதம்பி 1924-1925
திரு. ஆ. சபாரத்தினசிங்கி 1925-1927
திரு. ஆ .ளு. இராசரத்தினம் 1927-1931
திரு. ஆ .ளு. இளையதம்பி 1932-1936
திரு. ஏ. நாகலிங்கம் 1936-1941
திரு. யு.ஏ. குலசிங்கம் 1941-1950
திரு. த. முத்துச்சாமிப்பிள்ளை 1947-1950
திரு. நம. சிவப்பிரகாசம் 1950 முதல்
“இந்து சாதனம்” பத்திரிகையின் கௌரவ பத்திரததிபர்கள்
திரு. தம்பு கைலாசபிள்ளை 1889-1896
திரு. P . கார்த்திகேசபிள்ளை 1896-1920
திரு ம. வே. திருஞனாசம்பந்தபிள்ளை 1920-1951
திரு. நம. சிவப்பிரகாசம் 1951 முதல்
1960 நீராவியடி குருக்கள் மடம் அமைக்கக் காணியைப் பொறுப்பேற்றது.
1963 சைவப் புலவர் இளஞ் சைவப்புலவர் பரீட்சைகளையும் சித்தாந்த பிரவேச பண்டிதர், பால பண்டிதா,; பண்டிதர் பரீட்சைகளை நடாத்தத் தொடங்கியது.
1961 வேதாரணியம் கார்த்திகை நட்சத்திர மடம் தரும பரிபாலனத்தைப் பொறுப்பேற்றது.
1967 “இந்து சாதனம்” “ ர்iனெர ழுசபயn” பத்தரிகைகளின் 75வது ஆண்டு சேவையை நினைவுபடுத்த 75ம் ஆண்டு மலர் வெளியிட்டது.
1972 அகில இலங்கைச் சைவ சமய பாடப் பரீட்சைகளை சைவ பரிபாலன சபை நடாத்தத் தொடங்கியது.
சைவப்பிரகாச அச்சியந்திரசாலையின் முகாமையாளர்களககப் பின் வருவோர் கடமை ஆற்றி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள்.
திரு. த.கைலாசபிள்ளை 1889-1896
திரு. P . கார்த்திகேசபிள்ளை 1896-1906
திரு.ஆ .சபாபதிப்பிள்ளை 1902-1903
திரு. ளு. கந்தையாபிள்ளை 1903-1918
திரு. சித. மு. ப. சிதம்பரநாதச்செட்டியார் 1918-1921
திரு. ளு. அம்பிகைபாகன் 1921-1929
திரு. ளு. அட்சலிங்கம் 1929-1942
திரு. சி. பசுபதிச்செட்டியார் 1942-1943
திரு. ஏ. விசுவலிங்கம் 1942-1943
திரு. ளு. பொன்னுச்சாமி 1943-1946
திரு. யு. கனகசபாபதி 1946-1947
திரு. சு.பொ.கந்தையா 1947
திருவாளர்கள் ஐ. சின்னத்துரை,மு. மயில்வாகனம், மு.ஊ பாலசுப்பிரமணியஐயர், இ.சங்கர்,சு. சிவகுருநாதன், யோகேந்திரா, தர்மலிங்கம், ந.கங்கைவேணியன், இராமகிருஸ்ணன், இ.சபாலிங்கம் முகாந்திரம் இ.பொ. இராசையா இ.செ. மன்மதரரின் போன்றோர் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தார்கள்.
தற்பொழுது சூழ்நிவைகாரணமாக “இந்து சாதனம்” “ர்iனெர ழுசபயn” பத்திரிகைகள் ஒரே பத்திரிகையாக வெளி வருகின்றன. நாவலர் ஐயா அவர்களினதும் வெர் வழி வந்தோரினதும் மரபைப் பின்பற்றிச் சைவசித்தாந்தச் செந்நெறியைப் பிரசாரம் செய்து வருகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பத்திரிகைகள் சமய சார்பாகவும் தேசிய அளவிலும் வெளி வந்துள்ளன. பெரும் பாலனவை பல்வேறு காரணங்களினால் நின்று விட்டன. நூற்றாண்டு காணும் அளவுக்குச் சேவை செய்வது என்பது அருஞ் சாதனையாகும். “இந்து சாதனம்” “ ர்iனெர ழுசபயn” இரு பிரசுரங்களும் தொடர்ந்தும் சைவசித்தாந்த மரபைப் பின் பற்றி, அதன் ஸ்தாபகர்கள் நோக்கங்கள் நிறைவேற, பழைமை போற்றி, புதிய உத்வேகம் பெற்று வெளிவர வேண்டும். சைவப் ரேறிஞர்களும் சைவ மக்களும், ஒத்துழைப்பும், ஊக்கமும் கொடுத்து, வளர்ப்பது மேலான சிவப்பணியாகும்.