ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.
சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 19ம் தேதி (29.04.1888) ஞபயிற்றுக்கிழமையும், கிருஸ்ணபட்சத்துச் சதுர்த்தியும், மூல நட்சத்திரமும், சித்தயோகமும், கௌலவ சரணமும் கூடிய சுப தினத்திலே வணிணார்பண்ணணையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்திலே, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா; கோயிலில் விடே அபிடேக ஆராதனைகள் செய்யப்பெற்று, அங்கிருந்து மங்கல குத்துவிளக்கு ஏற்றிக் கொணர்ந்து “சைவ பரிபாலன சபை” சைவப்பெரு மக்களால் தோற்றுவிக்கப்பட்டது இச் சபை இலங்கை வாழ் சைவ தக்களின் பாதுகாவலனாக விளங்க வேண்டும் என்பதே ஸ்தாபக்களது நோக்கமாகும்.
“சைவ பரிபாலன சபை” நாவலரின் மருகரும், நன்மாணாக்கரும் ஆகிய வித்துவ சிரோமணி திரு. ச. பொன்னம்பலபிள்ளை அவர்களைத் தலைவராகவும், நாவலர் அவர்களுடைய தமையனார் மகன் திரு. த.கைலாசப்பிள்ளை அவர்களைக் காரியதரிசியாகவும் கொண்டிருந்தது.