அகில இலங்கை சைவநெறி, தமிழ்மொழியுடன் நுண்ணறிவும் பரீட்சை – 2025

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கோட்பாட்டுக்கமைய மாணவர்களிடையே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் இலங்கை முழுவதும் பரீட்சைகள் நடாத்திப் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வருகின்றோம். 2025 ஆம் ஆண்டு தரம் 2 முதல் 11 வரை சைவநெறியும் தரம் 2 முதல் 5 வரை மாணவர்களுக்கு தமிழ்மொழி வினாத்தாளும் 6 முதல் 8 வரை தமிழ் மொழியுடனான நுண்ணறிவு (20%) வினாப்பகுதியும் இணைந்து தரம் 12 மாணவருக்கு இந்துநாகரிகம், இந்துசமயம் ஆகிய பாடங்களுக்கும் பரீட்சை நடாத்தவுள்ளோம் என்பதை மகிழ்வுடன் […]

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை தினம் – 2025

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை தினமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் இந்துசாதனம் பத்திரிகை வெளியிடுதல் நிகழ்வும் வரும் 10-12-2025 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இல. 66 கல்லூரி வீதி நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சைவாபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலைசைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் அறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் திங்கட்கிழமைஇ புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் மாலை 05.00 மணி தொடக்கம் 06.00 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள சகல மாணவர்களையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம.; இவ் வகுப்புக்கள் யாவும் இலவசமாகவே மேன்மை கொள் சைவ நோக்கத்தில் நடைபெறுகிறது. மேற்படி செயற்பாட்டிற்கு […]

சைவபரிபாலன சபையின் பரீட்சைகள்

சைவபரிபாலன சபையின் பரீட்சைப்பகுதியால் வழமைபோன்று 2022ரூபவ் 2023 ஆகிய ஆண்டுகளிலும் அகிலஇலங்கைச்‌ சைவநெறித்‌ தேர்வு தரம்‌ 2 முதல்‌ 12 வரையும்‌. தமிழ்மொழித்‌ தேர்வு தரம்‌ 2 முதல்‌ 8 வரையும்‌ நடாத்தப்‌பெற்றுள்ளன. மேற்படி பரீட்சைகளுக்கு மாவட்ட ரீதியாக கீழ்குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையான பாடசாலைகள்‌ பங்குபற்றியிருந்தன. மாவட்டப் பாடசாலைகள் 2022 2023 யாழ்ப்பாணம் 364 417 கிளிநொச்சி 71 93 முல்லைத்தீவு 66 83 வவுனியா 07 27 மன்னார் 14 27 வெளி மாவட்டம் 16 29 […]

அறநெறிப்‌ பாடசாலைகள்‌ , பண்ணிசை வகுப்புக்கள்‌

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலைசைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் அறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் மாலை 05.00 மணி தொடக்கம் 06.00 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள சகல மாணவர்களையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம. இவ் வகுப்புக்கள் யாவும் இலவசமாகவே மேன்மை கொள் சைவ நோக்கத்தில் நடைபெறுகிறது. மேற்படி செயற்பாட்டிற்கு […]

நாவலர்‌ சோலை முன்பள்ளி பாலர்‌ பாடசாலை

சபை நடாத்தும்‌ முன்பள்ளி பாடசாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலவசமாக நடாத்தப்படும்‌ இப்‌பள்ளியில்‌ தற்சமயம்‌ 28 மாணவர்கள்‌ கற்கின்றனர்‌. ஆசிரியர்‌ தின விழாரூபவ் கண்காட்சிரூபவ்பேச்சுப்போட்டிரூபவ் விளையாட்டுப்‌ போட்டிகள்இ கண்காட்சிரூபவ் கலை விழா என்பன சிறப்பாக நடைபெற்றன.முன்பள்ளி பாடசாலைக்கு கட்டிடம் அமைப்பதற்கான அனுமதி 2000ஆம் ஆண்டு பெறப்பட்டு பின் கிடப்பில்போடப்பட்டு இருந்த ஆவணங்கள் மீளாய்வு செய்யப்டு 2024இல் புதிய கட்டிடம் அமைப்பதற்கு உரியநடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது (BA/95/2024)

அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்புக்கள்

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை. சபையின் நன்நோக்கங்களில் ஒன்றான அறநெறிப் பாடசாலை அகில இலங்கை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 மாணவர்கள் பதிவு செய்து இலவசமாக கற்று வருகிறார்கள் (வௌ;ளிக்கிழமை மாலை 03.00முதல் 05.00மணி வரை). பரதநாட்டிய வகுப்பும் நடைபெற்று வருகிறது (ஞாயிற்றுக்கிழமை காலை 09.30முதல் 11.00மணி வரை). ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவில் பண்ணிசை, மிருதங்கம்இ யோகாசனம் மற்றும ஆங்கிலமொழி […]

வனங்களும் நமது பண்பாடும்

வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை. வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான ஆரண்யகப் பகுதிகள் (ஆரண்யகம் – காடு சார்ந்தது). இதிகாச, புராணங்களில் வனங்கள்: ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. இராமபிரான் அறவோருடன் இணைந்து ஸத்ஸங்கம் நடத்தியதும், அரிய அஸ்த்ரங்கள் பெற்றதும் , அரக்கரோடு பொருதியதும் அரண்ய காண்ட விவரிப்பு. பாண்டவர்கள் முனிவர்களிடம் அற நுட்பங்களை அறிந்ததும், பார்த்தன் […]

சைவ பரிபாலன சபை சரித்திரம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 19ம் தேதி (29.04.1888) ஞபயிற்றுக்கிழமையும், கிருஸ்ணபட்சத்துச் சதுர்த்தியும், மூல நட்சத்திரமும், சித்தயோகமும், கௌலவ சரணமும் கூடிய சுப தினத்திலே வணிணார்பண்ணணையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்திலே, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா; கோயிலில் விடே அபிடேக ஆராதனைகள் செய்யப்பெற்று, […]