சைவ பரிபாலன சபையின் இல. 66 கல்லூரி வீதி நீராவியடி நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் ஐப்பசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை 13-11-2026 காலை 08.00 மணிக்கு தீட்சை வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. தீட்சை பெறவிரும்புவர்கள், பதிவுகளை 0212217680 / 0777895716இன் ஊடாக மேற்கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் சைவ சமய தீட்சை பெற்றுக்கொள்ளலாம. வருபவர்கள் நீராடி தோய்த்து உலர்ந்த சைவ பண்பாடு உடைகள் அணிந்து கொண்டு வரவும். வரும்போது ஒரு சிறிய செம்பு (பித்தளை நல்லது), பூக்கள், குரு தட்சணைப்பணம் (சிவாச்சாரியாருக்கு வழங்க) என்பவற்றை கொண்டு வரவும். தீட்சை பெற்றுக் கொண்டதற்குரிய சான்றிதழ் சபையால் வழங்கப்படும்.
