சைவபரிபாலன சபையின் பரீட்சைப்பகுதியால் வழமைபோன்று 2022ரூபவ் 2023 ஆகிய ஆண்டுகளிலும் அகில
இலங்கைச் சைவநெறித் தேர்வு தரம் 2 முதல் 12 வரையும். தமிழ்மொழித் தேர்வு தரம் 2 முதல் 8 வரையும் நடாத்தப்
பெற்றுள்ளன. மேற்படி பரீட்சைகளுக்கு மாவட்ட ரீதியாக கீழ்குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையான பாடசாலைகள்
பங்குபற்றியிருந்தன.
மாவட்டப் பாடசாலைகள் | 2022 | 2023 |
யாழ்ப்பாணம் | 364 | 417 |
கிளிநொச்சி | 71 | 93 |
முல்லைத்தீவு | 66 | 83 |
வவுனியா | 07 | 27 |
மன்னார் | 14 | 27 |
வெளி மாவட்டம் | 16 | 29 |
மொத்தப் பாடசாலைகள் | 538 | 676 |
இங்கு வெளிமாவட்டம் எனக் குறிப்பிடப்பட்ட பாடசாலைகளுக்குள் திருகோணமலைரூபவ் மட்டக்களப்புரூபவ் ஹட்டன்,பதுளை ஆகிய இடங்களைச் சேரந்த பாடசாலைகள் உள்ளடங்குகின்றன. தொடரும் காலத்தில் ஏனைய மாவட்டப்
பாடசாலைகளுக்கும் இப் பரீட்சைகளை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளோம்.
இப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக அதிகூடிய புள்ளிகளைப் பெறும்
மாணவர்களுக்கு தர ரீதியாக பரிசளிக்கும் விழாவினையும் நடாத்தி வருகின்றது.